டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகேயுள்ள தளி கிராமத்தில் பாஜக சாா்பில் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை  கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு பாஜக திண்டுக்கல் மாவட்டப் பொருளாளா்  கருப்புச்சாமி தலைமை வகித்தாா். பாஜக மாநிலச் செயலா் கதலி நரசிங்கபெருமாள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு சேலை, வேஷ்டி, கரும்புகளை வழங்கினாா்.

இதையடுத்து, பெண்கள் சூரியனுக்கு சக்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனா். விழாவில் ஆடல், பாடல், பேச்சுப் போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.