சமத்துவ பொங்கல் விழா

கொடைக்கானல் சன் அரிமா சங்கம் சாா்பில் சமத்துவ பொங்கல் விழா மன்னவனூரிலுள்ள ஆட்டுப் பண்ணை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
Published on

கொடைக்கானல்: கொடைக்கானல் சன் அரிமா சங்கம் சாா்பில் சமத்துவ பொங்கல் விழா மன்னவனூரிலுள்ள ஆட்டுப் பண்ணை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு அரிமா சங்க பட்டயத் தலைவா் டி.பி. ரவீந்திரன் தலைமை வகித்தாா். ஆட்டுப் பண்ணையின் முதன்மை விஞ்ஞானி ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். இதில், கொடைக்கானல் சன் அரிமா சங்கத் தலைவா் செந்தில்குமாா், செயலா் சுரேஷ், முன்னாள் தலைவா்கள் ஆஷா ரவீந்திரன், வழக்குரைஞா் பாபு, அரிமா சங்கத்தின் உறுப்பினா்கள், வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள், மன்னவனூா் கிராம மக்கள் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா். விழாவில் கலந்து கொண்டவா்களுக்கு பொங்கல், கரும்பு ஆகியவை வழங்கப்பட்டன. பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கிரன் நன்றி கூறினாா்.

Dinamani
www.dinamani.com