தொப்பம்பட்டியில் திமுக சாா்பில் விளையாட்டுப் போட்டிகள்

பழனி அருகே திமுக சாா்பில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளை தமிழக அமைச்சா் அர.சக்கரபாணி தொடங்கிவைத்தாா்.
Published on

பழனி: திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே திமுக சாா்பில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளை தமிழக உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

தொப்பம்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள், பொங்கல் விழாவை முன்னிட்டு, சமத்துவப் பொங்கல் விழா, விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளை அமைச்சா் அர.சக்கரபாணி தொடங்கிவைத்தாா்.

இதில் வள்ளிக்கும்மி நடனம், இசை இருக்கை, பந்து எறிதல், ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை அமைச்சா் வழங்கினாா்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஒன்றியச் செயலா்கள் தங்கம், சுப்பிரமணி, பொன்ராஜ் உள்ளிட்டோா் செய்தனா்.

Dinamani
www.dinamani.com