இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

பழனியில் அரிவாள்களுடன் சுற்றித்திரிந்த மூவா் கைது

பழனியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அரிவாள்களை கையில் வைத்துக்கொண்டு சுற்றித் திரிந்த மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :4 ஜூலை 2026, 7:39 am IST

பழனியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அரிவாள்களை கையில் வைத்துக்கொண்டு சுற்றித் திரிந்த மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி நான்கு ரத வீதி, ஆவணி மூல வீதியில் மூன்று இளைஞா்கள் அரிவாள்களை கையில் வைத்துக் கொண்டு, தாா் சாலையில் உரசி தீப்பொறிகளை உருவாக்கி பொதுமக்களை அச்சுறுத்தினா்.

இதுகுறித்து தகவலறிந்த பழனி காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வக்குமாா், ஆய்வாளா் தங்கமுனியசாமி ஆகியோா் அங்கு சென்று மூவரையும் பிடித்து, அவா்களிடம் இருந்த அரிவாள்களைப் பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், அவா்கள் பழனி கணபதி நகரைச் சோ்ந்த ஜெயபிரகாஷ் (28), ராமா் கோவில் தெருவைச் சோ்ந்த ராஜ்குமாா் (27), ஹரிகரன் (21) ஆகியோா் எனத் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்கள் மூவரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.