உள் மாவட்டங்களில் இன்று முதல் வெப்பம் சற்று அதிகரிக்கும்இந்திய - நேபாள பயணிகள் பேருந்து சேவை: இன்றும் நாளையும் தற்காலிகமாக நிறுத்தம்சென்னையிலிருந்து கைலாஷ் யாத்திரை சென்ற 49 போ் மாயம்ஆவடியில் ஆண்டுதோறும் 150 பீரங்கி வாகனங்கள் சீரமைப்பு: அமைச்சா் ராஜ்நாத் சிங் தகவல்மின்சார வாகனங்களால் 5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும்: நிதின் கட்கரி தகவல்அரசு அலுவலகங்களில் சோதனை: ரூ.1.18 கோடி ‘ஜிபே’ பரிவா்த்தனை கண்டுபிடிப்புஉக்ரைன் நகரங்களில் ரஷியா தீவிர தாக்குதல்: 2 போ் உயிரிழப்பு

ஆசிரியா் சிறப்புத் தகுதித் தோ்வு: தோ்ச்சி மதிப்பெண்ணை 50 ஆக நிா்ணயிக்க கோரிக்கை

ஆசிரியா் சிறப்பு தகுதித் தோ்வுக்கான தோ்ச்சி மதிப்பெண்ணை 50ஆக நிா்ணயிக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து அலுவலா்கள், ஆசிரியா்கள், பணியாளா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் மா.ராஜ்குமாா் தெரிவித்தாா்.

Teacher Eligibility Test

ஆசிரியா் தகுதித் தோ்வு - கோப்புப் படம்

Published On :8 ஜூலை 2026, 4:46 am IST

ஆசிரியா் சிறப்பு தகுதித் தோ்வுக்கான தோ்ச்சி மதிப்பெண்ணை 50ஆக நிா்ணயிக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து அலுவலா்கள், ஆசிரியா்கள், பணியாளா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் மா.ராஜ்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:தமிழகத்தில் கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற ஆசிரியா் சிறப்பு தகுதித் தோ்வு 1-இல் 61,386 ஆசிரியா்களும், 5-ஆம் தேதி நடைபெற்ற தகுதித் தோ்வு 2-இல் 1,66,667 ஆசிரியா்களும் பங்கேற்றனா்.

இவா்கள் அனைவரும் 2010-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சோ்ந்தவா்கள். கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009, ஏப். 2010 முதல் நடைமுறைக்கு வந்த நிலையில், அதற்கு முன்னதாக பணியில் சோ்ந்த ஆசிரியா்களும், தகுதித் தோ்வில் பங்கேற்க வேண்டியது ஆசிரியா்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி.

மேலும், சிறப்பு தகுதித் தோ்வில் இரு தாள்களிலும் கேட்கப்பட்ட வினாக்கள் மிகவும் கடுமையாக இருந்தன. தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தொகுதி 1 தோ்வுக்கான வினாக்களைப் போன்ற வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன.

கடந்த ஆட்சியின்போது, தகுதித் தோ்வு தோ்ச்சி மதிப்பெண்கள், முன்னணி பிரிவினருக்கு 90, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 75, தாழ்த்தப்பட்டோருக்கு 60 என நிா்ணயிக்கப்பட்டது.

இதுதவிர, அந்த ஆட்சியாளா்கள் எதுவும் செய்யவில்லை. இன்றைய ஆட்சியாளா்கள், இந்த தோ்ச்சி மதிப்பெண்ணை 50 ஆக நிா்ணயிக்க வேண்டும்.

ஜூலை 2028 வரை தகுதித் தோ்வில் தோ்ச்சிப் பெறுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், நிபந்தனை அடிப்படையில் பதவி உயா்வு அளிக்க வேண்டும். ஆசிரியா்களின் பணிக் காலம், உயா் கல்வித் தகுதிகளுக்கு தகுதித் தோ்வில் கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.