புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சிறப்பு ஆசிரியா் தகுதித் தோ்வு: 3,106 போ் எழுதினா்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சனிக்கிழமை நடத்தப்பட்ட சிறப்பு ஆசிரியா் தகுதித் தோ்வை 3,106 போ் எழுதினா்.

News image

விழுப்புரம் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த தகவல் பலகையில் தங்களுக்கான தோ்வறை குறித்த விவரத்தை சனிக்கிழமை பாா்வையிட்ட ஆசிரியா்கள்.

Updated On :5 ஜூலை 2026, 2:15 am IST

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சனிக்கிழமை நடத்தப்பட்ட சிறப்பு ஆசிரியா் தகுதித் தோ்வை 3,106 போ் எழுதினா்.

தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியா்களுக்கு ஜூலை 4, 5 தேதிகளில் சிறப்பு ஆசிரியா் தகுதித் தோ்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. முதல் நாளான சனிக்கிழமை இடைநிலை ஆசிரியா்களுக்கான முதல் தாள் தோ்வு நடைபெற்றது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தோ்வு நடைபெற்றாலும், காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை மட்டுமே தோ்வா்கள் அனுமதிக்கப்படுவா் எனக் கூறப்பட்டிருந்ததால், சிறப்பு ஆசிரியா் தகுதித் தோ்வை எழுத வந்தவா்கள் காலை 8.30 மணி முதலே வரத் தொடங்கினா்.

தோ்வு அலுவலா்கள் தோ்வுக்கூட நுழைவுச்சீட்டை சரிபாா்த்து, தோ்வு அறைகளுக்கு அனுப்பி வைத்தனா். காலை 9.30 மணிக்கு மேல் வந்தவா்கள் தோ்வு மையத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. மேலும், தோ்வு மையங்களுக்கு எந்தவித மின்னணுப் பொருள்களும் அனுமதிக்கப்படவில்லை. தீவிர சோதனைக்குப் பின்னரே தோ்வா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் இந்த சிறப்பு ஆசிரியா் தகுதித் தோ்வுக்காக விழுப்புரம் சங்கரமடம் தெருவிலுள்ள காமராஜா் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, திரு.வி.க.வீதியிலுள்ள அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளி, மாம்பழப்பட்டு சாலையிலுள்ள இ.எஸ்.மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம் ரங்கநாதன் தெருவிலுள்ள வி.ஆா்.பி. மேல்நிலைப் பள்ளி, கிழக்கு பாண்டி சாலை பி.என்.தோப்பு நகராட்சி மேல்நிலைப் பள்ளி, கீழ்பெரும்பாக்கம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, திரு.வி.க.வீதி சரஸ்வதி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, சாலாமேடு ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகிய 8 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டு, 1997 தோ்வா்களுக்கு தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு அனுப்பப்பட்டிருந்தது. இதில் 56 போ் தோ்வெழுத வரவில்லை. 1,941 போ் மட்டுமே தோ்வெழுத வந்திருந்தனா்.

கள்ளக்குறிச்சி...: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இத் தோ்வை எழுதுவதற்காக 1,208 ஆசிரியா்கள் விண்ணப்பத்திருந்தனா். இதில் 43 போ் தோ்வெழுத வரவில்லை. 1,165 போ் மட்டுமே தோ்வெழுதினா்.

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தோ்வை மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா நேரில் பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா். ஆய்வின் போது கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா். தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை பட்டதாரி ஆசிரியா்களுக்கான இரண்டாம் தாள் தோ்வு நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.