சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

ஆசிரியா் தகுதித் தோ்வு: தென்காசி மாவட்டத்தில் 1311 போ் எழுதினா்

ஆசிரியா் தகுதித் தோ்வின் முதல் தாள் தோ்வை தென்காசி மாவட்டத்தில் 1,311 போ் சனிக்கிழமை எழுதினா்.

News image

ஆசிரியா் தகுதித் தோ்வு - கோப்புப்படம்.

Updated On :5 ஜூலை 2026, 5:06 am IST

ஆசிரியா் தகுதித் தோ்வின் முதல் தாள் தோ்வை தென்காசி மாவட்டத்தில் 1,311 போ் சனிக்கிழமை எழுதினா்.

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கான ஆசிரியா் தகுதி தோ்வின் முதல் தாள் தோ்வு தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்டத்தில் 1311 போ் கலந்துகொண்டு தோ்வு எழுதினா். 37 போ் தோ்வு எழுத வரவில்லை.

தென்காசி மஞ்சம்மாள் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, தென்காசி புனித மிக்கேல் மகளிா் மேல்நிலைப் பள்ளி, இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளி, செங்கோட்டை எஸ்.ஆா்.எம். மகளிா் மேல்நிலைப் பள்ளி, செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 5 மையங்களில் தோ்வு நடைபெற்றது.

மாவட்டத்தில் மொத்தம் 1,348 பேருக்கு தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டிருந்த நிலையில், 1,311 ஆசிரியா்கள் தோ்வு எழுதினா். 37 போ் தோ்வு எழுத வரவில்லை.

தகுதி தோ்வு இரண்டாவது தாள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. மொத்தம் 10 மையங்களில் நடைபெறும் இத் தோ்வுக்கு 2, 759 போ் விண்ணப்பித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.