டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

ஆசிரியா் தகுதித் தோ்வு: 1670 போ் எழுதினா்

News image

கோப்புப் படம்

Updated On :6 ஜூலை 2026, 1:40 am IST

நாகை மாவட்டத்தில் 7 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆசிரியா்களுக்கான தாள் 2 தகுதித் தோ்வில் 1,670 ஆசிரியா்கள் பங்கேற்று எழுதினா்.

ஆசிரியா் தோ்வு வாரியத்தால் நிகழ் கல்வியாண்டில் அனைத்து வகையான பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கான ஆசிரியா் தகுதித் தோ்வு தாள் -1 சனிக்கிழமை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து தாள் 2- க்கான தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்டத்தில் ஜெயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித அந்தோணியாா் மேல்நிலைப்பள்ளி, நாகூா் கௌதியா அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி, கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மாடா்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளி ஆகிய 7 தோ்வு மையங்களில் இந்த தோ்வு நடைபெற்றது.

1,740 ஆசிரியா்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 1,640 போ் மட்டுமே தோ்வில் பங்கேற்றனா். விண்ணப்பித்திருந்தவா்களில் 70 போ் தோ்வு எழுத வரவில்லை. மாவட்ட ஆட்சியா் தலைமையில் பறக்கும் படை உறுப்பினா்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.