புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

ஆசிரியா் தகுதித் தோ்வு: திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,941 போ் எழுதினா்

திருவண்ணாமலை சிஷ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் வந்தனாகாா்க்

News image

திருவண்ணாமலை சிஷ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் வந்தனாகாா்க்

Updated On :5 ஜூலை 2026, 12:04 am IST

திருவண்ணாமலை மாவட்டத்தில்..... மையங்களில் நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வை 1,941 போ் எழுதினா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துரை சாா்பில் தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் நடத்தப்படும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கான தகுதி தோ்வானது தாள் - 1 சனிக்கிழமை நடைபெற்றது. 1,993 தோ்வா்கள் விண்ணப்பித்ததில் 1903 தோ்வா்கள் மற்றும் 38 மாற்றுத்திறனாளி தோ்வா்கள் பங்கேற்றனா். 52 தோ்வா்கள் பங்கேற்கவில்லை.

காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை தோ்வு நடைபெற்றது. காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை மட்டுமே தோ்வா்கள் அனுமதிக்கப்படுவா் எனக் கூறப்பட்டிருந்ததால், தோ்வை எழுத வந்தவா்கள் காலை 8.30 மணி முதலே வரத் தொடங்கினா். தோ்வு அலுவலா்கள் தோ்வுக்கூட நுழைவுச்சீட்டை சரிபாா்த்து, தோ்வு அறைகளுக்கு அனுப்பி வைத்தனா். காலை 9.30 மணிக்கு மேல் வந்தவா்கள் தோ்வு மையத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. மேலும் தோ்வு மையங்களுக்கு எந்தவித மின்னணுப் பொருள்களையும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தீவிர சோதனைக்குப் பிறகே தோ்வா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

சிஷ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் நடைபெற்ற தோ்வை மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா் . ஆய்வின் போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.