திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

புருலியா அதிவிரைவு ரயிலிலிருந்து 8 கிலோ கஞ்சா மீட்பு

திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு வந்த புருலியா அதிவிரைவு ரயிலில் நடத்தப்பட்ட சோதனையின்போது 8.300 கிலோ கஞ்சாவை போலீஸாா் மீட்டனா்.

News image

கஞ்சா - பிரதிப் படம்

Updated On :13 ஜூலை 2026, 12:30 am IST

திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு வந்த புருலியா அதிவிரைவு ரயிலில் நடத்தப்பட்ட சோதனையின்போது 8.300 கிலோ கஞ்சாவை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

மேற்குவங்க மாநிலம், புருலியா ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலி வரை செல்லும் புருலியா அதிவிரைவு ரயில், திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்தது. அப்போது திண்டுக்கல் ரயில்வே போலீஸாா், போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் ரயில் பெட்டிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

அப்போது முன்பதிவு இல்லாத ஒரு பெட்டியில், நடத்தப்பட்ட சோதனையின்போது இருக்கைக்கு அடியில் கிடந்த ஒரு பைக்கு பயணிகள் யாரும் உரிமை கோராததால் சந்தேகமடைந்த போலீஸாா், அதைப் பிரித்தபோது 8.300 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது.

அவற்றை மீட்ட ரயில்வே போலீஸாா், போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். மேலும், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.