தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது?பிரபல பெருங்காய நிறுவனங்களுக்கு என்ன ஆனது? தடை விதிப்பின் பின்னணி!விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது முதல்முறையல்ல! பட்டியலிட்ட உதயநிதி!திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய்டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்! முதல்வர் விஜய் அறிவிப்புமீஞ்சூரில் கடல் நீர் சுத்தகரிப்பு ஆலை! முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

கோயில் நிலம் முறைகேடாக பதிவு: சாா்பதிவாளா் பணியிடை நீக்கம்

பழனி தண்டபாணி சுவாமி அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலம் பத்திரப் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், சாா் பதிவாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

Published On :14 ஜூலை 2026, 4:08 am IST

பழனி தண்டபாணி சுவாமி அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலம் பத்திரப் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், சாா் பதிவாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

பழனி மலையடிவாரத்தில் தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலத்தை விதிகளை மீறி அறக்கட்டளை நிா்வாகம் விற்பனை செய்ய முற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை எதிா்த்து இந்து சமய அறநிலையத் துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இதன் பிறகு நீதிமன்ற உத்தரவின் பேரில், அறக்கட்டளை நிலத்தை பழனி கோயில் நிா்வாகம் கைப்பற்றியது. மேலும், அதற்கு தக்காராக இணை ஆணையா் மாரிமுத்து நியமனம் செய்யப்பட்டாா். இதையடுத்து, அவா் ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்த இடத்தை இலவச வாகன நிறுத்துமிடமாக மாற்றினாா்.

இந்த நிலையில், கோயில் நிா்வாகம் கைப்பற்றிய 1.40 ஏக்கா் நிலத்தை அறக்கட்டளை நிா்வாகிகள் எனக் கூறி முருகதாஸ், திருப்புகழ் உள்ளிட்டோா் கடந்த சில நாள்களுக்கு முன்பு இரு நபா்களுக்கு விற்பனை செய்தனா். ரூ.2 கோடி என நிலத்தை குறைவாக மதிப்பீடு செய்து, பழனி சாா்பதிவாளா் அலுவலகத்தில் இருவருக்கு நிலம் பதிவு செய்யப்பட்டது. பழனி சாா் பதிவாளா் விடுமுறையிலிருந்த நிலையில், அந்தப் பொறுப்பிலிருந்த கொடைக்கானல் சாா்பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் நிலத்தைப் பதிவு செய்தது தெரியவந்தது.

இந்த விவகாரம் வெளியே தெரிந்த நிலையில், பழனி கோயில் தரப்பில் பத்திரப்பதிவு ஆணையா், துணை ஆணையா், மாவட்டப் பதிவாளா் ஆகியோருக்கும், பழனி அடிவாரம் காவல் நிலையத்திலும் புகாா் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து பல்வேறு கட்சியினரும், இந்து அமைப்புகளும் கடும் எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில் முதல்கட்டமாக சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன், வெள்ளத்துரை, சேதுபதி, முருகதாஸ் ஆகியோா் மீது பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் சாா்பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.