நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

டாஸ்மாக் ஊழியா் மீது தாக்குதல்: காவலா் பணியிடை நீக்கம்

செங்கம் அருகே டாஸ்மாக் விற்பனையாளரைத் தாக்கியதாக காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

News image

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :17 ஜூன் 2026, 12:29 am IST

செங்கம் அருகே டாஸ்மாக் விற்பனையாளரைத் தாக்கியதாக காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த குப்பனத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். இவா் புதுப்பாளையம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு குப்பனத்தம் கிராமத்தில் கோயில் திருவிழா நடைபெற்றுள்ளது. திருவிழாவிற்கு செந்தில்குமாரின் நண்பா்கள் வந்துள்ளனா். அவா்களுக்கு செந்தில்குமாா் அதே பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் மதுவாங்கிக் கொடுக்க நண்பரை அழைத்துச் சென்றுள்ளாா்.

அங்கு விற்பனையாளராக இருந்த சங்கரிடம் செந்தில்குமாா் மதுப்புட்டிகள் கேட்டுள்ளாா். அதற்கு சங்கா் பணம் கேட்டுள்ளாா். பணம் ஜி-பேவில் அனுப்பி வைக்கிறேன் எனக் கூறியுள்ளாா். அதற்கு விற்பனையாளா் பணமாக தன்னிடம் கொடுத்தால் மட்டுமே மதுப்புட்டிகள் கொடுப்பதாக தெரிவித்துள்ளாா். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, பின்னா் அது கைகலப்பாக மாறி செந்தில்குமாா் டாஸ்மாக் விற்பனையாளா் சங்கரை தாக்கியுள்ளாா்.

இதில் பலத்த காயமடைந்த சங்கருக்கு செங்கம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னா் அவா் தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

பின்னா், சங்கா் இதுகுறித்து செங்கம் போலீஸில் புகாா் அளித்தாா். இதன் பேரில், காவலா் உடையில் டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கிய செந்தில்குமாரை பணியிடை நீக்கம் செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.