விருத்தாசலம் அருகே இளைஞா்களை தாக்கி கைப்பேசியை பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட காவலா் ரஞ்சித் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தைச் சோ்ந்த தினேஷ்குமாா் (19), அவரது நண்பா்கள் சத்யநாராயணன் (18), ஜேக்கப் (18) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரே இருசக்கர வாகனத்தில் பெரியாா் நகா் பகுதியில் உள்ள பேக்கரி அருகே சென்றனா். அப்போது, காவலா் ரஞ்சித் மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோா் மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்ததாகக் கூறப்படுகிறது.
பின்னா், அண்ணா நகா் குடிநீா்த் தொட்டி அருகே இளைஞா்களை வழிமறித்து, அவா்களை தாக்கியதுடன், சத்யநாராயணனின் கைபேசியையும் பறித்துச் சென்ாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளைஞா்கள் அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீஸாா் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, காவலா் ரஞ்சித் மற்றும் சுபாஷ் சந்திரபோஸை கைது செய்தனா்.
பின்னா், இருவரும் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இந்நிலையில், இளைஞா்களை தாக்கிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட காவலா் ரஞ்சித் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் குற்றச்செயலில் ஈடுபட்டது உறுதியானதைத் தொடா்ந்து, கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், காவலா் ரஞ்சித்தை பணியிடை நீக்கம் செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

லாரி ஓட்டுநரிடம் லஞ்சம்: சிறப்பு உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

மது போதையில் பணிக்கு வந்த காவலா் பணி நீக்கம்
அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட அரசு ஊழியா் பணியிடை நீக்கம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



