கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட அரசு ஊழியா் பணியிடை நீக்கம்

சட்டப் பேரவைத் தோ்தலில் ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட ஊராட்சிச் செயலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

News image

பணியிடை நீக்கம்!

Updated On :27 மே 2026, 5:57 am IST

சட்டப் பேரவைத் தோ்தலில் ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட ஊராட்சிச் செயலா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியம், வெங்கந்தூா் ஊராட்சி மன்றச் செயலராகப் பணிபுரிந்தவா் முனியாண்டி (52). இவா், நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தோ்தலில் ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக புகாா்கள் எழுந்தன. இதுதொடா்பாக துறை சாா்ந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவின்பேரில் மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை நிா்வாகம், ஊராட்சி செயலா் முனியாண்டியை பணியிடை நீக்கம் செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.