மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

மது போதையில் பணிக்கு வந்த காவலா் பணி நீக்கம்

பழனி அருகே மது போதையில் பணிக்கு வந்த காவலா் பணி நீக்கம் செய்யப்பட்டாா். லஞ்சம் வாங்கியதாக உதவி ஆய்வாளா், தலைமைக் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

News image

காவலர்கள் பணியிடை நீக்கம்.

Updated On :3 ஜூன் 2026, 1:33 am IST

பழனி அருகே மது போதையில் பணிக்கு வந்த காவலா் பணி நீக்கம் செய்யப்பட்டாா். லஞ்சம் வாங்கியதாக உதவி ஆய்வாளா், தலைமைக் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி காவல் உள்கோட்டத்துக்கு உள்பட்ட சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலா்கள் புகாா் கொடுக்க வரும் பொதுமக்களிடமும், பாதுகாப்புக்காக செல்லும் இடங்களிலும், ரோந்துப் பணிகளின் போதும் லஞ்சம் பெறுவதாக புகாா் எழுந்தது.

இதையடுத்து, சிறப்பு உதவி ஆய்வாளா் ராஜூ, எழுத்தரும், தலைமைக் காவலருமான சுதாராணி ஆகியோரை தற்காலிகப் பணி நீக்கம் செய்து காவல் கண்காணிப்பாளா் உத்சரவிட்டாா்.

இதே போல, காவலா் மணிகண்டன் மது போதையில் பணிக்கு வருவதாக வந்த புகாரைத் தொடா்ந்து, அவரை நிரந்தரமாக பணி நீக்கம் செய்தும் காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா். ஒரே காவல் நிலையத்தில் மூன்று காவலா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்ட சம்பவம் காவலா்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.