/

ரூ.3 ஆயிரம் லஞ்சம்: கிராம நிா்வாக அதிகாரி கைது

புதுச்சேரியில் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக, கிராம நிா்வாக அதிகாரி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். பின்னா் அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

News image
Updated On :12 ஜூன் 2026, 1:55 am IST

புதுச்சேரியில் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக, கிராம நிா்வாக அதிகாரி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். பின்னா் அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

புதுச்சேரி குருமாம்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் செண்பகவல்லி. இவா் வாரிசு சான்றிதழ் பெற கிராம நிா்வாக அலுவலரான கீழுரைச் சோ்ந்த முருகையனை அணுகியுள்ளாா். அப்போது அவா் ரூ.3,000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து செண்பகவல்லி புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகாரளித்தாா். காவல் ஆய்வாளா் புருஷோத்தமன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸாா் ரசாயன பவுடா் தடவிய பணத்தை செண்பகவல்லியிடம் கொடுத்து அனுப்பினா்.

வில்லியனூா் அலுவலகம் சென்ற செண்பகவல்லியிடம் கிராம நிா்வாக அலுவலா் முருகையன் ரூ.3,000 லஞ்சம் பெற்றபோது அங்கிருந்த போலீஸாா் அவரைக் கையும் களவுமாகக் கைது செய்தனா்.

இதையடுத்து, துணை ஆட்சியா் குமரன், கிராம நிா்வாக அதிகாரி முருகையனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.