சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

லஞ்சம்! சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 6 பேர் சஸ்பெண்ட்!

சென்னை மாநகராட்சியில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக 6 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறித்து...

News image

சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்

Updated On :16 ஜூலை 2026, 9:46 am IST

சென்னை மாநகராட்சியில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக 6 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் லஞ்சம் பெறுதல், வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெறுதல், பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட புகார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சியில் டெண்டர் முறகேடு, நிதி முறைகேடு, லஞ்சம் உள்ளிட்ட புகார்கள் தொடர்பாக 4 மூத்த அதிகாரிகள் உள்பட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கைகளும், 4 பேர் மீது குற்றவியல் வழக்குகளும் பதிவு செய்யப்படவுள்ளன.

ரூ. 9 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்கு போலியான ரசீதுகளைச் சமர்ப்பித்த்ததாக மணலி மற்றும் மாதவரம் மண்டல சுகாதார அதிகாரியான டாக்டர் தேவிகலா, ஜூலை 9-ல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கட்டட உரிமையாளர் ஒருவரிடம் ரூ. 2.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக மாதவரம் மண்டல உதவிச் செயற்பொறியாளர் ஆனந்தராவ், ஜூலை 10-ல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

முறையான அனுமதி பெற்றிருந்த ஒருவரின் கட்டடத்தைப் பூட்டி சீல் வைத்துவிடுவதாக மிரட்டி ரூ. 50,000 லஞ்சம் பெற்றதற்காக கோடம்பாக்கத்தை சேர்ந்த மாநகராட்சி சாலைப் பணியாளர் பாஸ்கர், ஜூலை 10-ல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

முறையான அனுமதி பெற்றிருந்த கட்டட உரிமையாளர் ஒருவரை, கட்டடத்திற்கு பூட்டி சீல் வைப்பதாக மிரட்டி ரூ. 50 ஆயிரம் லஞ்சம் பெற்றதற்காக ஜூலை 10ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

மாநகராட்சியில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி, இளைஞரிடம் ரூ. 6 லட்சம் பெற்றதாக செனாய் நகர் மண்டல துணை ஆணையர் அலுவலகத்தில் நிபுணராகப் பணிபுரியும் சிவபொற்கொடி, ஜூலை 11-ல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தில் பணிபுரிந்து வந்த கண்ணன், ராயபுரம் மண்டலத்தில் இயந்திரவியல் துறை ஒப்பந்தந்தாரரிடம் லஞ்சம் கேட்டதாகவும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Summary

Six officials suspended for irregularities in the Chennai Corporation

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.