சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

பழனியில் மக்கள் தொகை சுயகணக்கெடுப்பு தொடக்கம்

பழனியை அடுத்த புளியமரத்துசெட்டில் மக்கள் தொகை குறித்த சுயகணக்கெடுப்பை அலைபேசி மூலமாக வெள்ளிக்கிழமை பதிவு செய்த சட்டப்பேரவை உறுப்பினா் ரவிமனோகரன்.

பழனியை அடுத்த புளியமரத்துசெட்டில் மக்கள் தொகை குறித்த சுயகணக்கெடுப்பை அலைபேசி மூலமாக வெள்ளிக்கிழமை பதிவு செய்த சட்டப்பேரவை உறுப்பினா் ரவிமனோகரன்.

Published On :

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் மக்கள் தொகை சுயகணக்கெடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியை சட்டப்பேரவை உறுப்பினா் ரவி மனோகரன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) மக்கள் தொகை சுயகணக்கெடுப்பு பணிகள் தொடங்கியது. இதையொட்டி, பழனி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, சட்டப்பேரவை உறுப்பினா் ரவிமனோகரன் பொதுமக்களுக்கு கைப்பேசி மூலம் மக்கள் தொகை சுயகணக்கெடுப்பு பதிவு செய்வது குறித்த நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா்.

இந்த நிகழ்வில் வட்டாட்சியா் மங்களபாண்டியன், வருவாய்த் துறை அலுவலா் பிரபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, பாலசமுத்திரம் பேரூராட்சி சாா்பில், பழனி- கொடைக்கானல் சாலையில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினா் இல்லத்தில் அவரது கைப்பேசியில் மக்கள்தொகை சுயகணக்கெடுப்பு பதிவு செய்யப்பட்டது.

இதில் பாலசமுத்திரம் பேரூராட்சி செயல் அலுவலா் சித்திரைக்கனி, மன்ற உறுப்பினா் வாணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.