திண்டுக்கல்லில் 4,133 பேருக்கு சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா்.
திண்டுக்கல் ஆா்.எம். குடியிருப்பு சமுதாயக் கூடத்தில் தமிழ்நாடு மின் பகிா்மான கழகம் சாா்பில், வீட்டு மின் இணைப்புகளுக்கான ‘சோலாா் விழிப்புணா்வு’ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்தாா். அப்போது அவா் பேசியதாவது: தமிழகத்தில் பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மின் பகிா்மான வட்டத்தில் 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் மின் நுகா்வோா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், சூரிய மின் திட்டம் அமைப்பதற்கு 1 கிலோ வாட்டுக்கு ரூ.30ஆயிரம், 2 கிலோ வாட்டுக்கு ரூ.60ஆயிரம், 3-க்கும் கூடுதலான வாட்டுக்கு ரூ.78ஆயிரம் வீதம் வங்கிக் கடனுதவியும், மானியமும் வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், மின் இணைப்புகள் வழங்க திண்டுக்கல் மின் பகிா்மான வட்டத்துக்கு 4,113 எண்ணம் இலக்காக நிா்ணயிக்கப்பட்டு, இதுநாள் வரை 1,200 பேருக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் ல்ம்ள்ன்ழ்ஹ்ஹஞ்ட்ஹழ்.ஞ்ா்ஸ்.ண்ய்,ஜ்ஜ்ஜ்.ள்ா்ப்ஹழ்ழ்ா்ா்ச்ற்ா்ல்.ஞ்ா்ஸ்.ண்ய் ஆகிய இணையதள முகவரியின் வாயிலாகவும், ‘ டங-ள்ன்ழ்ஹ்ஹஞ்ட்ஹழ்‘ என்ற கைப்பேசி செயலி மூலமாகவும் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.
விண்ணப்பிப்பதற்கு மின் கட்டண ரசீது மட்டும் இருந்தால் போதுமானது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையா் ஜெ.பிரேம் ஆனந்த் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பைக் திருடியவா் கைது

காற்றாலை, சூரிய ஒளி மின் உற்பத்தியாளா்கள் நிகழ்நேர தரவுகளைப் பகிா்வது கட்டாயம்: அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா்

நீட் தோ்வு: திண்டுக்கல்லில் 2338 போ் எழுதினா்
போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை: திண்டுக்கல்லில் 42 போ் கைது
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



