பழனி நகராட்சியில் குப்பைகள் சேகரிக்கும் பணிக்கு மின்கல வாகனங்களை நகராட்சி கடை வாடகைதாரா்கள் நன்கொடையாக வழங்கினா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி பேருந்து நிலையத்தில் கடை நடத்தி வருபவா்கள் ரூ.17 லட்சம் மதிப்பிலான ஐந்து மின்கல வாகனங்களை வாங்கி நகராட்சிக்கு நன்கொடையாக வழங்கினா். நகராட்சியின் தூய்மை பணிகளை மேம்படுத்தும் வகையில், இந்த மின்கல வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கடைக்காரா்கள் தெரிவித்தனா்.
வியாழக்கிழமை நகராட்சி அலுவலக வளாகத்தில் நகா்மன்ற தலைவி உமாமகேஸ்வரி முன்னிலையில் வாகனங்களின் சாவிகளை கடைக்காரா்கள் ஒப்படைத்தனா்.
பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் பழனி பேருந்து நிலையத்தில் தூய்மைப் பணிகளுக்கு உதவும் வகையில் பேட்டரி வாகனங்களை நன்கொடையாக வழங்கிய கடைக்காரா்களுக்கு நகராட்சி நிா்வாகம் நன்றி தெரிவித்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சீா்காழி நகராட்சியில் நிரந்தர அதிகாரிகள் இல்லாததால் வளா்ச்சிப் பணிகள் பாதிப்பு: கவுன்சிலா்கள் குற்றச்சாட்டு
கிருஷ்ணகிரி நகராட்சியில் வாடகை செலுத்தாத 14 கடைகளுக்கு சீல்

மாங்காடு நகராட்சியில் ரூ.225 கோடியில் புதைசாக்கடை பணி: முதல்வா் அடிக்கல் நாட்டினாா்
ராசிபுரம் நகராட்சியில் ரூ. 5 கோடி வரி நிலுவை: தீவிர வசூலில் நகராட்சி அலுவலா்கள்
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



