அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்! மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் பொருள்களை சேதப்படுத்திய காவலா் கைது

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் மது போதையில் மருத்துவ உபகரணங்கள், பொருள்களை சேதப்படுத்திய காவலா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கைதான காவலா் தங்கப்பாண்டி.

Updated On :25 ஜூலை 2026, 6:48 am IST

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் மது போதையில் மருத்துவ உபகரணங்கள், பொருள்களை சேதப்படுத்திய காவலா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிபவா் தங்கப்பாண்டி (38). இவா் அண்ணா சாலைப் பகுதியில் பணியில் இருந்த போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்திலிருந்து அதிக சப்தம் வந்ததால் அதில் வந்த இருவரை காவலா் தங்கப்பாண்டி நிறுத்தி விசாரித்தாராம். அப்போது காவலா் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து அவா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் தங்கப்பாண்டிக்கு கையில் காயம் ஏற்பட்டதாம். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக அவா் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்குச் சென்றாா்.

அங்கு செவிலியா்கள் வர காலதாமதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த அவா் அங்கிருந்த மருத்துவ உபகரணங்கள், கண்ணாடி, ஜன்னல் உள்ளிட்ட ரூ. பல லட்சம் மதிப்பிலான பொருள்களை உடைத்து சேதப்படுத்தினாராம். இந்த சம்பவம் முகநூல், கட்செவி அஞ்சல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதுகுறித்து தலைமை மருத்துவா் பொன்ரதி கொடைக்கானல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் காவலா் தங்கப்பாண்டி மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.

பணியிடை நீக்கம்: இந்த நிலையில், கைது செய்யப்பட்ட காவலா் தங்கப்பாண்டியை பணியிடை நீக்கம் செய்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.