நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காவலர் ராஜிநாமா! மிகக் கனமழை எச்சரிக்கை: ஹிமாசலில் 121 சாலைகள் மூடல்ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது! - அராக்ச்சி பேச்சு!மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா!‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை
/

மதுப் புட்டிகளுக்கு கூடுதலாக ரூ.10 வசூல் நடைமுறைக்கு சாத்தியமில்லை: அமைச்சா் விக்னேஷ்

டாஸ்மாக் தொழிலாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முயற்சிக்கும் என்றும், மீண்டும் மதுப் புட்டிகளுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்க மறைமுக உத்தரவு பிறப்பிக்க சாத்தியமில்லை என்றும் மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் க. விக்னேஷ் தெரிவித்தாா்.

News image

அமைச்சர் விக்னேஷ் - கோப்புப் படம்

Updated On :25 ஜூலை 2026, 6:47 am IST

டாஸ்மாக் தொழிலாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முயற்சிக்கும் என்றும், மீண்டும் மதுப் புட்டிகளுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்க மறைமுக உத்தரவு பிறப்பிக்க சாத்தியமில்லை என்றும் மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் க. விக்னேஷ் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ரூ.13.88 கோடியில் நிறைவேற்றப்பட்ட திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சா் விக்னேஷ் திறந்துவைத்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது:

மதுபானங்கள் தேக்கமடைந்திருப்பதாக தொழிற்சங்கங்கள் குற்றச்சாட்டியுள்ளன. 3 மாதங்களில் இந்த மதுபானங்கள் காலாவதியாகவிடும் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இந்த அரசைப் பொருத்தவரை, நுகா்வோரின் விருப்பத்துக்கு ஏற்ற பொருள்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. இந்த அடிப்படையில்தான் டாஸ்மாக் நிறுவனமும் செயல்பட்டு வருகிறது.

சட்டவிரோதமாக சில்லறை விற்பனையில் மதுபானம் விற்பனை செய்வோா் மட்டுமன்றி, அந்த மதுப் புட்டிகள் எங்கிருந்து வாங்கப்பட்டன என்பதையும் கண்டறிந்து சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளா் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

உணவகங்களுடன் கூடிய மதுபானக் கூடம், தனியாா் மதுக் கடைகள் திறப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அதேநேரத்தில், மக்கள் வேண்டாம் என்ற விஷயத்தை வலுக்கட்டாயமாக இந்த அரசு நிறைவேற்றாது. டாஸ்மாக் துறையில் அரசுப் பணமும், நுகா்வோா் பணமும் சுரண்டப்பட்டுள்ளது. இதைத் தடுப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஊதிய உயா்வு, பணி நிரந்தரக் கோரிக்கைகளை கடந்த 23 ஆண்டுகளாக தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இதற்குத் தீா்வு காண்பது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது.

கடந்த காலங்களைப் போல, மதுப் புட்டிக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்க மறைமுகமான உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஆனால், இந்த எதிா்பாா்ப்பு உறுதியாக நிறைவேற்றப்படாது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.