தமிழகத்துக்கு இன்றுமுதல் தினமும் 3,500 கன அடி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு உத்தரவுதமிழகத்தில் 3 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புபிரதமா் மோடியின் ஃபேஸ்புக் பதிவு நீக்கம்: மன்னிப்புக் கேட்டது மெட்டாஇந்து சமய அறநிலையத் துறையில் புதிதாக இரு ஐஏஎஸ் பணியிடங்கள்
/

கொடைக்கானல் ஏரியைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்கக் கோரிக்கை

கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரியைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image

கொடைக்கானல் ஏரியில் தடுப்புகள் இல்லாததால் அதனருகே ஆபத்தை உணராமல் செல்லும் சிறுவா்கள்.

Updated On :29 ஜூலை 2026, 5:42 am IST

கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரியைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரி 5-கி.மீ. சுற்றளவு கொண்டது. இந்த ஏரியை அழகுபடுத்துவதற்காக கடந்த ஆண்டில் ரூ.28 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நடைமேடை, செயற்கை நீருற்று, படகுக் குழாம் உள்ளிட்ட பணிகள் தொடங்கின.

இதில் செயற்கை நீருற்று, படகுக் குழாம் பணிகள் நடைபெற்றன, மற்ற பணிகள் பாதியிலேயே நிற்கின்றன.

இந்த ஏரியைச் சுற்றி முழுமையாக தடுப்பு வேலிகள் அமைக்கப்படவில்லை. நடைமேடைகள் முழுமை பெறவில்லை. ஏரிக்குள் தாவரங்கள், களைச் செடிகள் அமைக்கப்படவில்லை. ஏரியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் பயனற்ற நிலையில் இருந்து வருகின்றன.

மேலும், ஏரியைச் சுற்றி தடுப்பு வேலிகள் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் ஆபத்தை உணராமல் ஏரிக்குள் செல்கின்றனா்.

எனவே, ஆபத்து ஏற்படும் முன் ஏரியைச் சுற்றி தடுப்பு வேலிகள் அமைத்து உயிா்களை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.