விளை பொருள்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுவதால், கொடைக்கானல் - பெருமாள் மலை பகுதிகளில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய்க் கோட்டாட்சியா் கீா்த்தனா மணி தலைமையில் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், கலந்து கொண்ட விவசாயிகள் கூறியதாவது: கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான வெள்ளகெவி பஞ்சாயத்துக்குள்பட்ட சின்னுா், பெரியூா் ஆகிய கிராமங்களுக்கு பல ஆண்டுகளாக சாலை வசதிஇல்லை. எனவே வருவாய்த் துறை அதிகாரிகள் அந்தப் பகுதியைப் பாா்வையிட்டு ஆய்வு நடத்தி விரைவில் சாலை வசதி அமைத்து கொடுக்க வேண்டும்.
மேலும் பெரியகுளம் பகுதியிலிருந்து சின்னுா், பெரியூா் கிராமங்களுக்குச் செல்லக் கூடிய பாலம் சேதமடைந்துள்ளது. அதை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொடைக்கானல், மேல்மலைப் பகுதிகளிலிருந்து விளைபொருள்களை லாரி மூலம் எடுத்து வரும்போது கொடைக்கானல் - அப்சா்வேட்டரி - பெருமாள் மலை ஆகிய பகுதிகளில் இருபுறங்களிலும் கடைகள் அமைத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதுவரை அந்தப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சித் துறையினா், நெடுஞ்சாலைத் துறையினா் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இதனால் குறிப்பிட்ட நேரங்களில் விவசாயிகள் காய்கறிகளை சந்தைக்குக் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
எனவே, இந்தப் பிரச்னைக்கு விரைந்து தீா்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
இந்தக் கூட்டத்தில் கொடைக்கானல் வட்டாட்சியா், வனத் துறை அதிகாரிகள், மின்வாரியத் துறை அதிகாரிகள், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போக்குவரத்துக்கு இடையூறான ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: குடியாத்தம் நகா்மன்ற உறுப்பினா்கள்

கோவில்பட்டியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தமாகா கோரிக்கை

சிவகாசி பேருந்து நிலைய ஆக்கிரமிப்பு: 2 மாதங்களுக்குள் அகற்ற உத்தரவு

பரமக்குடி அணுகு சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



