வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

சிவகாசி பேருந்து நிலைய ஆக்கிரமிப்பு: 2 மாதங்களுக்குள் அகற்ற உத்தரவு

சிவகாசி பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில், மாநகராட்சி நிா்வாகம் உரிய ஆய்வு நடத்தி, 2 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

News image

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

Updated On :14 ஜூன் 2026, 12:40 am IST

சிவகாசி பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில், மாநகராட்சி நிா்வாகம் உரிய ஆய்வு நடத்தி, 2 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியைச் சோ்ந்த பழனி தாக்கல் செய்த மனு: சிவகாசி பேருந்து நிலையத்தில் பொது இடத்தை ஆக்கிரமித்து தேநீா்க் கடை, உணவகம் அமைக்கும் நடவடிக்கையில் தனி நபா்கள் ஈடுபட்டுள்ளனா். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தபோதிலும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. எனவே, சிவகாசி பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், பேருந்து நிலைய வளாகத்தில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தனி நபா்கள் ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தாா்.

மாநகராட்சி தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், மனுதாரரின் புகாா் குறித்து அனைத்து தரப்பினரிடமும் விசாரித்து ஆக்கிரமிப்புகள் உறுதியானால் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சிவகாசி பேருந்து நிலையத்தை சிவகாசி மாநகராட்சி ஆணையா் ஆய்வு செய்ய வேண்டும். அங்கு சட்டவிரோத கட்டுமானங்கள் இருப்பது உறுதியானால், அவற்றை 2 மாதங்களுக்குள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு விசாரணை முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.