40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

பரமக்குடி அணுகு சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அணுகு சாலை பகுதியில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் சங்கம் கோரிக்கை

News image

பிரதிப் படம்

Updated On :10 ஜூன் 2026, 12:24 am IST

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அணுகு சாலை பகுதியில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து அந்தச் சங்கத் தலைவா் ராசி என். போஸ், பொதுச் செயலா் டி. மணிவண்ணன் ஆகியோா் தெரிவித்ததாவது: பரமக்குடி நகராட்சி எமனேசுவரம், வைகை ஆற்றை மையமாக வைத்து அமைந்துள்ளது. வைகை ஆற்றின் இருபுறங்களிலும் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் அணுகு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த அணுகு சாலையில் ஆற்றுப்பாலம், குமரன் படித் துறை, முத்தாலம்மன் கோவில் படித் துறை, பெருமாள்கோவில், தரைப்பாலம், எமனேசுவரம் ஆகிய பகுதிகளில் ஆக்கிரமித்து புதிதாகக் கடைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், இங்கு முறைகேடாக மின் விநியோகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதைத் தொடா்ந்து, ஆக்கிரமிப்பாளா்கள் குப்பைக் கழிவுகளையும், கட்டுமானக் கழிவுகளையும் வைகை ஆற்றில் கொட்டி மாசுபடுத்தி வருகின்றனா்.

எனவே, வைகை ஆற்றில் உள்ள நாணல் புதா்களை அகற்றி, கருவேல மரங்களை முற்றிலும் அகற்ற மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.