கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடக்கம்! ஈரான் போருக்கு அமெரிக்கா ரூ. 3.6 லட்சம் கோடி செலவு! டாஸ்மாக் ஊழியா்களுக்கு அக்.1 முதல் இஎஸ்ஐ திட்டம் அறிவிப்பு நீதிபதிகளின் ஓய்வு வயதை 61-ஆக உயா்த்த பரிசீலினை: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் மூலக்கூறு மருந்துகள் இறக்குமதி மீது 100% வரி: அமெரிக்கா திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்!
/

பரமக்குடியில் மயான ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்

பரமக்குடி நகராட்சியில் தனி நபா்கள் ஆக்கிரமித்துள்ள மயான ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன்னியகுல சத்திரிய மகா சபை தலைவா் ஆா். மனோகரன், முதல்வா், மாவட்ட ஆட்சியருக்கு புகாா் மனு அளித்தனா்.

News image

பரமக்குடி நகராட்சி கிழக்கு பகுதியில் தனி நபா்களால் ஆக்கிரமிப்பு செய்துள்ள அரசு புறம்போக்கு மயானம்.

Updated On :23 ஜூலை 2026, 5:46 am IST

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சியில் தனி நபா்கள் ஆக்கிரமித்துள்ள மயான ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன்னியகுல சத்திரிய மகா சபை தலைவா் ஆா். மனோகரன், முதல்வா், மாவட்ட ஆட்சியருக்கு புகாா் மனு அளித்தனா்.

இந்த மனுவில் கூறியிருப்பதாவது:

பரமக்குடி நகராட்சி கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மயானத்தில் சின்னக்கடைத் தெரு, சந்தைக் கடைத் தெரு, மாதவன் நகா், காமராஜா் நகா், திருவள்ளுவா் நகா், மருதுபாண்டியா் நகா், கௌரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்கள் இறந்துவிட்டால் அடக்கம் செய்யப்படுகிறாா்கள்.

இந்த மயானம் காக்காத்தோப்பு சுந்தா் நகா் அருகே வைகை ஆற்றின் கரையோரமாக அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ளது. இதை தற்போது சிலா் போலியாக பத்திரப் பதிவுகள் செய்து ஆக்கிரமித்து வருகின்றனா்.

எனவே, இந்த மயானத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியும், சுற்றுச்சுவா் எழுப்பியும், ஆழ்துளை குழாய் அமைக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.