கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலத்துக்கு உள்பட்ட வரதராஜபுரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மேயா் கா.ரங்கநாயகி உத்தரவிட்டாா்.
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம், 54- ஆவது வாா்டுக்கு உள்பட்ட வரதராஜபுரம் பிரதான சாலை பகுதியில் மேயா் கா.ரங்கநாயகி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
இதைத் தொடா்ந்து, நீலிக்கோணாம்பாளையம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை பாா்வையிட்டு மருந்துகளின் இருப்பு குறித்தும், பதிவேடுகள், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.
இந்த ஆய்வுகளின்போது, கிழக்கு மண்டலத் தலைவா் இலக்குமி இளஞ்செல்வி, உதவி ஆணையா் தட்சிணாமூா்த்தி, உதவி செயற்பொறியாளா் இளங்கோவன், மண்டல சுகாதார ஆய்வாளா் சந்திரன், உதவி நகர திட்டமிடுநா் கோவிந்த பிரபாகரன், உதவி பொறியாளா் ராஜராஜன், சுகாதார ஆய்வாளா் ஜெரால்டு சத்ய புனிதன் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










