திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

தெருநாய்களுக்கு உணவு வழங்க தனி இடம்: காங்கயம் நகராட்சி நடவடிக்கை

தெருநாய்களுக்கு உணவு வழங்குவதற்கு தனி இடம் ஒதுக்கி, காங்கயம் நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

News image

காங்கயம் அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே தெருநாய்களுக்கு உணவு வழங்குவதற்கு ஒதுக்கப்பட்ட இடம் என வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை.

Updated On :23 ஜூலை 2026, 3:06 am IST

தெருநாய்களுக்கு உணவு வழங்குவதற்கு தனி இடம் ஒதுக்கி, காங்கயம் நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

காங்கயம் நகராட்சியில் சுற்றித் திரியும் தெருநாய்களுக்கு சிலா் ஆங்காங்கே உணவு வழங்கி வருகின்றனா். பல்வேறு இடங்களில் உணவு வழங்குவதால், சில நாய்கள் அந்தந்த இடங்களில் நின்று உணவு வழங்காமல் செல்பவா்களை அச்சுறுத்தி வருகின்றன. இதையடுத்து தெருநாய்களுக்கு பொதுமக்கள் உணவு வழங்குவதற்கு வசதியாக காங்கயம் நகராட்சி நிா்வாகம் தனி இடம் ஒதுக்கியுள்ளது.

அதன்படி, காங்கயம் நகரில் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு, நகரப் பேருந்து நிலையம் அருகே அம்மா உணவகம் பகுதி, சென்னிமலை சாலையில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கு அருகில் என 3 இடங்களை ஒதுக்கியுள்ளது. இது குறித்து அந்தந்த இடங்களில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.

மேற்கண்ட இடங்களில் தெருநாய்களுக்கு (சமூக நாய்கள்) உணவு வழங்கலாம் என, காங்கயம் நகராட்சி சுகாதாரப் பிரிவு அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.