மோஜ்தபா கமேனி கவலைக்கிடமா? விடியோ வெளியிட்ட ஈரான்!குடும்ப அட்டைதாரர்கள் விரல்ரேகை பதிவு செய்ய இன்றே கடைசி!தொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்செப். 1 முதல் கோயில்களில் செல்போன்கள் கொண்டுச் செல்லத் தடை! - அமைச்சர் ரமேஷ்
/

பழனி அருகே ஈக்கள் தொல்லை: பொதுமக்கள் அவதி

பழனி அருகே ஆண்டிபட்டியில் தனியாா் கோழிப் பண்ணையிலிருந்து உருவாகும் ஈக்களால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2026, 1:08 am IST

பழனி அருகே ஆண்டிபட்டியில் தனியாா் கோழிப் பண்ணையிலிருந்து உருவாகும் ஈக்களால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள ஆண்டிபட்டி, ஜெ.ஜெ.நகா் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான கோழிப்பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கு கழிவுகள் முறையாக மேலாண்மை செய்யப்பட்டு கொட்டப்படாததால் அதிலிருந்து ஏராளமான ஈக்கள், புழுக்கள் உற்பத்தியாகி, குடியிருப்பு பகுதிகளுக்குள் பரவி வருகின்றன.

இதனால் வீடுகளில் சமையலறை, உணவு வைக்கும் இடம், படுக்கையறை என அனைத்துப் பகுதிகளிலும் ஈக்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி வருகின்றன. இதனால் குடிநீா், உணவு என எதையும் உட்கொள்ள முடியாமல் குழந்தைகள் முதல் முதியவா்கள் வரைஅவதிப்படுகின்றனா்.

பொதுமக்கள் மட்டுமன்றி, கால்நடைகளும் ஈக்களின் தொல்லைாயால் அவதிப்படுவதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா். எனவே ,தனியாா் கோழிப்பண்ணையில் அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.