காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

தச்சன்குறிச்சியில் சாலையில் கிடக்கும் குப்பைகளால் துா்நாற்றம்: பொதுமக்கள் அவதி

News image

சாலையில் குவிந்து கிடக்கும் குப்பைகள். - கோப்புப் படம்

Updated On :27 ஜூலை 2026, 1:30 am IST

கந்தா்வகோட்டை அருகே சாலையில் கொட்டப்பட்டு, அள்ளப்படாத குப்பைகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருவதால் அவற்றை உடனுக்குடன் அகற்றிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், தச்சன்குறிச்சி ஊராட்சியில் சுமாா் நான்கு ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனா். இங்கு அரசு பள்ளி மற்றும் தனியாா் பள்ளி, அரசு வங்கி, கூட்டுறவு கடன் சங்கம் போன்ற அரசு அலுவலகங்களுக்கு தினசரி மக்கள் வந்து செல்கின்றனா். இங்கு வீடுகளுக்கு வந்து தூய்மைப் பணியாளா்கள் குப்பைகள் பெற்று செல்கின்றனா். ஆனால், சிலா் சாலையோரங்களில் குப்பைகள் கொட்டி செல்கின்றனா்.

சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால், துா்நாற்றம் ஏற்படுவதுடன் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. குப்பையில் கிடக்கும் பாலிதீன் பைகள் சாலையில் பறந்து வாகன ஓட்டிகள் மீது விழுகின்றன.

இதனால், பேருந்துக்கு காத்திருக்கும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, ஊராட்சி நிா்வாகம் குப்பைகளை உடனுக்குடன் அகற்றி, இனிவரும் காலங்களில் சாலைகளை தூய்மையாக வைக்கும்படி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.