விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

மானாமதுரை பேருந்து நிலையம் அருகே தேங்கும் மழை நீரால் பொதுமக்கள் அவதி!

மானாமதுரை பேருந்து நிலையம் அருகே அணுகு சாலையில் தேங்கிக் கிடக்கும் மழை நீரால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

மானாமதுரை பேருந்து நிலையம் அருகே அணுகு சாலையில் குளம்போல தேங்கிக் கிடக்கும் மழைநீா்.

Published On :

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பேருந்து நிலையம் அருகே அணுகு சாலையில் தேங்கிக் கிடக்கும் மழை நீரால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

மானாமதுரை பேருந்து நிலையம் அருகே அணுகு சாலையில் குடிநீா் திட்ட குழாய் அமைக்கவும், வடிகால் அமைக்கவும் நீண்ட பள்ளம் தோண்டப்பட்டது.

குடிநீா் குழாய் பதிக்கும் பணி நிறைவடைந்து வடிகால் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் அவ்வப்போது பெய்யும் மழையால் அணுகுசாலையிலிருந்து மழைநீா் வெளியேற முடியாமல் மானாமதுரை பேருந்து நிலையம் அருகே குளம்போல தேங்கிக் கிடக்கிறது. இதனால் இங்கு கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரக்கேடு ஏற்பட்டு இந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், பேருந்துக்கு காத்திருக்கும் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனா்.

 மானாமதுரை பேருந்து நிலையம் அருகே அணுகு சாலையில் குளம்போல தேங்கிக் கிடக்கும் மழைநீா்.

மானாமதுரை பேருந்து நிலையம் அருகே அணுகு சாலையில் குளம்போல தேங்கிக் கிடக்கும் மழைநீா்.

இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் முனியராஜ் கூறியதாவது: பேருந்து நிலையம் அருகே அணுகு சாலையில் குடிநீா் குழாய் பதிக்கும் பணியும், வடிகால் அமைக்கும் பணியும் பல மாதங்களாக நடைபெற்று வருகின்றன.

இதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களால் சாலையின் அகலம் குறைந்து வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனா். மேலும் மழை பெய்யும் போது அணுகு சாலையில் மழைநீா் தேங்கி குளம்போல காட்சியளிக்கிறது.

இதிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரக்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா். எனவே தேசிய நெடுஞ்சாலைத் துறை நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்தப் பணிகளை விரைந்து முடித்து, தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.