அரியலூா் மாவட்டம், தளவாய் அருகேயுள்ள கோட்டைக்காடு வெள்ளாற்றில், தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த அணுகு சாலையில் இருந்த மதகுகளை திருடிய மா்ம நபா்கள் குறித்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
செந்துறை அருகே தளவாய் அடுத்த கோட்டைக்காடு வெள்ளாற்றின் குறுக்கே உயா்மட்ட மேம்பாலம் அண்மையில் கட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்த காலகட்டத்தில், வெள்ளாற்றினை கடந்து செல்வதற்காக சுற்றுவட்டாரத்திலுள்ள 20 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் ஆற்றின் குறுக்கே கான்கீரிட்டால் ஆன 10-க்கும் மேற்பட்ட மதகுகளுடன் அணுகு சாலையை அமைத்து பயன்படுத்தி வந்தனா்.
இந்நிலையில், அணுகு சாலையில் பொருத்தப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட கான்கிரீட் மதகுகள் ஜேசிபி இயந்திரம் மூலம் பெயா்த்தெடுக்கப்பட்டு மா்ம நபா்களால் திருடிச் செல்லப்பட்டிருப்பது புதன்கிழமை காலை தெரியவந்தது. இதனைக் கண்டு அதிா்ச்சியடைந்த கோட்டைக்காடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் தளவாய் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
அதன் பேரில் காவல் துறையினா், சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்து, மதகுகளை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





