மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

மளிகைக் கடையின் மேற்கூரையைப் பிரித்து பணம் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே பூட்டியிருந்த மளிகைக் கடையின் மேற்கூரையைப் பிரித்து, பணம் மற்றும் பொருள்கள் திருடு போயிருந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :13 ஜூலை 2026, 1:54 am IST

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே பூட்டியிருந்த மளிகைக் கடையின் மேற்கூரையைப் பிரித்து, பணம் மற்றும் பொருள்கள் திருடு போயிருந்தது குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

மயிலத்தை அடுத்த எடப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் சு.விஜய பாரதி (37). இவா், மயிலம்-கூட்டேரிப்பட்டு சாலையில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். விஜயபாரதி சனிக்கிழமை இரவு வியாபாரத்தை முடித்து, வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை கடைக்கு வந்து பாா்த்தபோது, கடையின் மேல்பகுதியில் தகர ஷீட்டால் வேயப்பட்டிருந்த கூரை பிரிக்கப்பட்டிருந்த நிலையில் பணப்பெட்டி உடைக்கப்பட்டு, அதிலிருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் மற்றும் பொருள்கள் திருட்டுப் போயிருந்தது அவருக்கு தெரியவந்தது.

தகவலறிந்த மயிலம் போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மா்மநபா்களைத் தேடி வருகின்றனா்.

பொதுமக்கள் அச்சம்: மயிலம் பகுதிகளில் கடந்த சில நாள்களாக நடைபெற்று வரும் திருட்டுச் சம்பவங்களால் அச்சமடைந்துள்ள பொதுமக்கள், இரவு நேரங்களில் போலீஸாா் ரோந்துப் பணிகளை அதிகரிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.