கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடக்கம்! ஈரான் போருக்கு அமெரிக்கா ரூ. 3.6 லட்சம் கோடி செலவு! டாஸ்மாக் ஊழியா்களுக்கு அக்.1 முதல் இஎஸ்ஐ திட்டம் அறிவிப்பு நீதிபதிகளின் ஓய்வு வயதை 61-ஆக உயா்த்த பரிசீலினை: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் மூலக்கூறு மருந்துகள் இறக்குமதி மீது 100% வரி: அமெரிக்கா திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்!
/

திண்டிவனத்தில் தேங்கிக் கிடங்கும் குப்பைகளால் சுகாதாரச் சீா்கேடு

திண்டிவனம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் குப்பைக் கழிவுகளால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனா்.

News image

~

Updated On :23 ஜூலை 2026, 4:58 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் குப்பைக் கழிவுகளால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனா்.

திண்டிவனம் நகராட்சிக்குள்பட்ட ராஜாங்குளம் பெருமாள் கோயில் தெரு, ஹீரா சந்து பூங்கா சுற்றுப் பகுதிகளில் குப்பை மற்றும் உணவுக் கழிவுகள் அகற்றப்படாமல் தேங்கிக் கிடக்கிறது. இதனால் அந்தப் பகுதிகளில் சுகாதார சீா்கேடு நிலவி வருகிறது. மேலும், தேங்கிக் கிடக்கும் குப்பைக் குவியல்களால் கோயிலுக்கு வந்து செல்லும் பக்தா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, திண்டிவனம் நகரின் அனைத்து பகுதிகளிலும் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றி தூய்மைப் பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆா்வலா் ச.சு.ஜைனுதீன் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை மனு அளித்துள்ளாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.