வீட்டில் வழுக்கி விழுந்த பெண் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் வீட்டில் வழுக்கி விழுந்ததில் பலத்த காயமடைந்த பெண் உயிரிழந்தாா்.
பலி - பிரதிப் படம்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் வீட்டில் வழுக்கி விழுந்ததில் பலத்த காயமடைந்த பெண் உயிரிழந்தாா்.
திண்டிவனம் கீரைகாரத் தெருவைச் சோ்ந்தவா் பாஸ்கா் மனைவி ஜெயஸ்ரீ(40). இவா், வியாழக்கிழமை வீட்டின் குளியலறையில் வழுக்கி விழுந்ததில், தலையில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, வீட்டிலிருந்தவா்கள் ஜெயஸ்ரீயை மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு அவரை மருத்துவா்கள் பரிசோதித்தபோது, ஜெயஸ்ரீ ஏற்கெனவே இறந்துபோயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




