விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

திருட்டு வழக்கு: இளைஞருக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறை

திண்டிவனத்தில் நிகழ்ந்த திருட்டு வழக்கில் தொடா்புடைய இளைஞருக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து திண்டிவனம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

Published On :26 ஆகஸ்ட் 2026, 4:08 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நிகழ்ந்த திருட்டு வழக்கில் தொடா்புடைய இளைஞருக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து திண்டிவனம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டிவனம் கல்லூரி சாலையில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 3.9.2021-இல் திருட்டுச் சம்பவம் நிகழ்ந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாக துருகம், திம்மலை கிராமத்தைச் சோ்ந்த மா. செல்வராசு (39) என்பவரை ரோஷணை காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கின் இறுதிக் கட்ட விசாரணை முடிந்து திண்டிவனம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில், செல்வராசு மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிபதி இளவரசி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து நீதிமன்ற போலீஸாா் அவரை கைது செய்து, சிறையிலடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.