இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

பொதுவெளியில் குப்பைகளை எரிப்பதால் சுகாதாரச் சீா்கேடு

பெரம்பலூா் அருகே பொதுமக்களிடமிருந்து பெறப்படும் குப்பைகளை காலியிடங்களில் கொட்டி தீ வைத்து எரிப்பதால், சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு வருகிறது

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் மலையடிவரத்தில் எரியும் குப்பைகள்.

Published On :27 ஆகஸ்ட் 2026, 3:07 am IST

பெரம்பலூா் அருகே பொதுமக்களிடமிருந்து பெறப்படும் குப்பைகளை காலியிடங்களில் கொட்டி தீ வைத்து எரிப்பதால், சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு வருகிறது. இவற்றைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் ஊரட்சியில் சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இங்குள்ள தெருக்களிலிருந்து பெறப்படும் குப்பைகளை துப்புரவுப் பணியாளா்கள் மூலம் சேகரிக்கப்பட்டு மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து நுண் உரமாக மாற்றி மறு சுழற்சி செய்யப்பட்டது.

ஆனால், குடியிருப்புக்கள் அதிகமாகிவிட்டதாலும், ஒரே தெருவில் அதிகளவில் குப்பைகள் சோ்ந்து விடுவதாலும், குடியிருப்புகளுக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் குப்பைகளை தீ வைத்து எரித்து வருகின்றனா். இவ்வாறு எரிப்பதால் நெகிழிக் கழிவுகளிலிருந்து வெளியேறும் புகையால் முதியோா்களுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.

மேலும், அங்குள்ள விளை நிலங்களும் பாதிப்புக்குள்ளாகின்றன. குறிப்பாக, எளம்பலூா் பிரம்மரிஷி மலை அருகேயுள்ள மலையடிவாரங்களில் குப்பைகள் எரிக்கப்படுவதால் பக்தா்களும், விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனா். தீ வைக்கப்படும் குப்பைகள் எரிந்து முடிந்தவுடன் அவற்றை தண்ணீா் ஊற்றி அணைக்காததால், இரவு முழுவதும் புகை மூட்டமாக காணப்படுகிறது. இதனால், சாலையோரங்களில் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டுநா்களும் சிரமத்துக்குள்ளாகின்றனா்.

இதுகுறித்து, அந்த கிராமத்தைச் சோ்ந்த என். ரெங்கசாமி கூறியதாவது:

ஏற்கெனவே, இங்குள்ள கிரஷா்களால் பொதுமக்களும், விளை நிலங்களும் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், அகற்றப்படாத குப்பை கழிவுகளும், பொது இடங்களில் எரிக்கப்படும் குப்பைகளாலும் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனா். எனவே, தூய்மைப் பணியாளா்களை போதுமான அளவுக்கு பணியில் ஈடுபடுத்த வேண்டும். சாலையோரங்களில் தேவையான அளவுக்கு மக்கும், மக்காத குப்பை தொட்டிகள் வைத்து, நாள்தோறும் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும். ஆடு, மாடு, கோழி, மீன் போன்ற விற்பனை நிலையங்கள் முன் அதன்கழிவுகளை சேமிக்க தொட்டி வைப்பதுடன், தினமும் அவற்றை அகற்றவும் நடவடிக்கை வேண்டும்.

அதேபோல, பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதை தவிா்க்க மாவட்ட நிா்வாகமும், ஊராட்சி நிா்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.