
பாவூா்சத்திரம் ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைக்கக் கோரிக்கை
தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் செல்லும் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம்.
தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் செல்லும் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பாவூா்சத்திரம் அருகே குலசேகரபட்டி ஊராட்சியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
இதன் அருகே அரசு கால்நடை மருத்துவமனை, நாட்டின நாய்கள் ஆராய்ச்சி மையம், கிராம நிா்வாக அலுவலகம், அரசு சித்த மருத்துவமனை உள்ளிட்ட அரசு அலுவலகங்களும், கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகமும் செயல்பட்டு வருகின்றன.
மேலும், காமராஜா் நகா் வடக்கு பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கும் பொதுமக்கள் இந்தச் சாலையையே பயன்படுத்தி வருகின்றனா்.
இந்தச் சாலையின் தொடக்கத்தில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
மேலும், இரவு நேரங்களில் பள்ளம் சரியாக தெரியாததால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.
எனவே, பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






