காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

பழனி அருகே வீடுகளில் புகுந்து திருட்டு

பழனி அருகே பட்டப்பகலில் மூன்று வீடுகளில் அடுத்தடுத்து நிகழ்ந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :1 ஆகஸ்ட் 2026, 1:22 am IST

பழனி அருகே பட்டப்பகலில் மூன்று வீடுகளில் அடுத்தடுத்து நிகழ்ந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த கல்துறை பகுதியில் வசிக்கும் பாலதண்டபாணி புதன்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூா் சென்றாா். இந்த நிலையில், 3 போ் கொண்ட கும்பல் வியாழக்கிழமை பட்டப்பகலிலேயே வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனா். அங்கு பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகைகள், ரொக்கப் பணத்தை திருடிச் சென்றனா். இந்த 3 பேரின் உருவமும் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவானது.

இதேபோல புளியம்பட்டியில் உள்ள தலைமைக் காவலா் பரமேஸ்வரி வீட்டுக் கதவை உடைத்து மா்ம நபா்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்டனா். மேலும், பெரிச்சிபாளையம் பகுதியில் மற்றொரு வீடு புகுந்து மா்ம நபா்கள் திருட முயன்ற போது, வீட்டின் உரிமையாளா் சத்தமிடவே அவா்கள் அங்கிருந்து தப்பி ஓடினா். இந்த திருட்டுச் சம்பவங்கள் குறித்து கீரனூா் காவல் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.