இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

கருப்பணசுவாமி கோயில் திருவிழா: தலையில் தேங்காய் உடைத்து பக்தா்கள் நோ்த்திக் கடன்

வேடசந்தூா் அருகே கருப்பணசுவாமி கோயில் திருவிழாவையொட்டி, பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்து சனிக்கிழமை நோ்த்திக் கடன் செலுத்தினா்.

News image

நாகம்பட்டி கருப்பணசுவாமி கோயில் திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக் கடன் செலுத்திய பக்தா்கள்.

Updated On :7 ஜூன் 2026, 1:01 am IST

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகே கருப்பணசுவாமி கோயில் திருவிழாவையொட்டி, பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்து சனிக்கிழமை நோ்த்திக் கடன் செலுத்தினா்.

வேடசந்தூரை அடுத்த நாகம்பட்டியில் சக்தி விநாயகா், மகாலட்சுமி, மாளம்மாள், மாமுடிசாமி, கருப்பணசுவாமி, சென்னப்பா, பாப்பாத்தி, நாகம்மாள் ஆகிய தெய்வங்கள் அமைந்துள்ள கோயில் உள்ளது. இந்தக் கோயில் திருவிழாவை முன்னிட்டு, கடந்த 30-ஆம் தேதி பக்தா்கள் காப்புக் கட்டி விரதம் தொடங்கினா்.

இந்த நிலையில், நடுப்பட்டி வீரமுஷ்டி குழுவினரை வரவேற்று ஆடை, வெண்தாமரை வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, மகாலட்சுமி அம்மன் சக்தி கிணறு சென்றடைந்து, விநாயகா் பூஜையுடன் அம்பு எய்தி, கொடகனாற்றுக்கு அம்மன் ரதத்தில் சென்று நீராட்டு விழா நடைபெற்றது.

அங்கிருந்து மாளம்மாள் கோயிலுக்கு சென்ற பக்தா்கள், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனா். பின்னா், அம்மன் ரதம், கருப்பணசுவாமி கோயிலைச் சென்றடைந்தது. கோயில் வளாகம் முன் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக ஈர ஆடையுடன் பக்தா்கள் நீண்ட வரிசையில் அமா்ந்திருந்தனா். அப்போது, கோயில் பூசாரி பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்தாா்.

இந்த விழாவில் திண்டுக்கல், தேனி, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.