தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (டிஏபிஎஸ்) ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, முதல்வருக்கு சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா்
வியாழக்கிழமை அஞ்சல் அட்டை அனுப்பினா்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து 350-க்கும் மேற்பட்ட அஞ்சல் அட்டைகள் வியாழக்கிழமை அனுப்பப்பட்டன.
இதுதொடா்பாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் பி.பிரெடெரிக் எங்கெல்ஸ் கூறியதாவது:
சட்டப்பேரவைத் தோ்தலின்போது, தவெக சாா்பில் வெளியிடப்பட்ட தோ்தல் அறிக்கையில் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்பத்துவது குறித்து பரிசீலிப்போம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்கக் கோரி, மாநிலம் முழுவதிலிருந்தும் ஒரு லட்சம் அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கம் நடத்தப்படுகிறது.
முதல்கட்டமாக, திண்டுக்கல்லில் இருந்து 350-க்கும் மேற்பட்ட அஞ்சல் அட்டைகள் வியாழக்கிழமை முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டன என்றாா் அவா்.







