எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

செவிலிய பயிற்சி மாணவி தற்கொலை

பழனி அருகே செவிலிய பயிற்சி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :13 ஜூன் 2026, 12:15 am IST

பழனி அருகே செவிலிய பயிற்சி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பழனியை அடுத்த அழகாபுரியைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகள் சந்தியா(20). இவா் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் செவிலியராக பயிற்சி பெற்று வந்தாா். விடுமுறைக்காக வீட்டுக்கு வந்தவா் வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து சந்தியாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனா்.

தொழிலாளி தற்கொலை: பழனியை அடுத்த பாப்பம்பட்டியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (40). கூலித் தொழிலாளி. இந்த நிலையில் இவா் குடும்பப் பிரச்னை காரணமாக மனமுடைந்து காணப்பட்டாராம். வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷ மாத்திரையை உட்கொண்டு இவா் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.