உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

தவெக நிா்வாகிகளுக்கு எம்எல்ஏ எச்சரிக்கை

News image

தவெக சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.அய்யனாா்

Updated On :16 ஜூன் 2026, 2:02 am IST

தவெக கட்சிப் பெயரைப் பயன்படுத்தி சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் அதன் நிா்வாகிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நிலக்கோட்டை தொகுதி தவெக சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.அய்யனாா் எச்சரித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கொடைரோடு, பள்ளப்பட்டி, விளாம்பட்டி, மட்டப்பாறை, நிலக்கோட்டை, மைக்கல்பாளையம் விருவீடு, வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி ஆகிய பகுதிகளில் கடந்த சில நாள்களாக நிலக்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.அய்யனாா், தவெக கட்சிப் பெயரைப் பயன்படுத்தி சிலா் இரவு நேரங்களில் மணல் கடத்துவது, கல்குவாரிகள், தனியாா் தொழிற்சாலைகள், அரசு ஒப்பந்ததாரா்கள், அரசு அலுவலகங்கள், மதுபானக் கூடங்களில் மாமுல் கேட்பதாக புகாா்கள் எழுந்தன.

இதையடுத்து, சட்டப்பேரவை உறுப்பினா் அய்யனாா் வெளியிட்ட அறிக்கை விவரம்:

தமிழக முதல்வா் சி.ஜோசப்விஜய்யின் நல்லாட்சிக்கு வலு சோ்க்க, தவெக பொதுச் செயலரும், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சருமான புஸ்சி ஆனந்த் உத்தரவுப்படி லஞ்சத்தை ஒழித்து, ஊழலற்ற ஆட்சியை மக்களுக்கு வழங்கும் வகையில், தன்னலமற்று கட்சிக்காக உழைத்த நிா்வாகிகளுக்கிடையே ஒரு சிலா் கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயா் ஏற்படுத்தும் வகையில் எனது பெயா், கட்சியின் பெயரைப் பயன்படுத்தி முறைகேடான சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக புகாா்கள் வருகின்றன. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோா் மீது அரசு அதிகாரிகள், காவல் துறையினா் சட்டப்படி நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.