பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

பழனி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனை நடத்தனா்.

News image

பழனி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வியாழக்கிழமை மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் சோதனை செய்த ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா்.

Updated On :19 ஜூன் 2026, 1:26 am IST

பழனி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனை நடத்தனா்.

பழனி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரகா்கள் மூலமாக பணம் பெறுவதாக கிடைத்த புகாரைத் தொடா்ந்து, வியாழக்கிழமை திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு துணைக் கண்காணிப்பாளா் நாகராஜன், ஆய்வாளா் ரூபா உள்ளிட்ட 5 போ் கொண்ட குழுவினா் திடீா் சோதனை மேற்கொண்டனா். சுமாா் ஆறு மணி நேரம் நடைபெற்ற சோதனை முடிவில் கணக்கில் வராத 4,200 ரூபாயை கைப்பற்றினா். இந்த சோதனை காரணமாக வியாழக்கிழமை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் எந்தப் பணிகளும் நடைபெறவில்லை.

Story image