எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

கோவை, கூடலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் சோதனை: ரூ.1.66 லட்சம் பறிமுதல்

கோவை மற்றும் நீலகிரி மாவட்டம் கூடலூா், ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஆகிய பகுதிகளில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

News image
Updated On :19 ஜூன் 2026, 1:57 am IST

கோவை மற்றும் நீலகிரி மாவட்டம் கூடலூா், ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஆகிய பகுதிகளில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். இதில், கூடலூரில் ரூ. 1.03 லட்சம், கோவையில் ரூ.63 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவை பாலசுந்தரம் சாலையில் மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாகன ஓட்டுநா் உரிமம் பெற விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பிப்பு, பதிவு எண் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த அலுவலகத்தில் காவல் கூடுதல் துணைக் கண்காணிப்பாளா் ராஜேஷ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை காலை திடீா் சோதனை மேற்கொண்டனா். அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறையாக சோதனையில் ஈடுபட்டனா். மேலும் அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை சரிபாா்த்தனா். மேலும், வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள், அலுவலகத்துக்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கணக்கில் வராத ரூ.63 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

கூடலூரில்...

நீலகிரி மாவட்டம், கூடலூா் மாக்கமூலா பகுதியில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஜெயக்குமாா் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை சோதனை மேற்கொண்டனா். இதில் ரூ.1 லட்சத்து 3, 590 கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது.

பெருந்துறையில்...

ஈரோடு மாவட்டம், பெருந்துறை- பவானி சாலையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளா் சாந்தி, ஆய்வாளா் ரேகா தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அலுவலக வேலையாக வந்த பொதுமக்கள், ஓட்டுநா் பயிற்சிப் பள்ளியைச் சோ்ந்தவா்களிடம் விசாரணை நடத்தினா். இந்த சோதனை மாலை வரை நீடித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.