கொடைக்கானலில் கடந்த இரு நாள்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த மூன்று நாள்களாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளுமையான சீதோஷ்ண நிலை நிலவியது. இந்தச் சூழலில், வார இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. மேலும், தங்கும் விடுதிகள், உணவு விடுதிகளில் கூட்டம் நிரம்பிக் காணப்பட்டது.
பசுமைப் பள்ளத்தாக்கு, பைன் பாரஸ்ட், குணா குகை, மோயா் பாயிண்ட், தாவரவியல் பூங்கா, ரோஜாத் தோட்டம், பிரையண்ட் பூங்கா, கோக்கா் ஸ்வாக் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
மேலும் கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களான மன்னவனூா் சூழல் மையம், பூம்பாறை இயற்கை எழில்காட்சி, கூக்கால் ஏரி உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் அப்சா்வேட்டரி, ஏரிச் சாலை, லாஸ் காட் சாலை, மூஞ்சிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் நிலவியது.
கொடைக்கானலில் சாரல் மழை: கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை மதியம் முதல் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. இந்தச் சாரல் மழையால் குளுமையான சீதோஷ்ணம் நிலவியது. இருப்பினும், நட்சத்திர ஏரியில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனா். மேலும் ஏரிச் சாலையைச் சுற்றி மிதிவண்டி, குதிரை சவாரி செய்தனா்.
கொடைக்கானல் ஏரிச் சாலைப் பகுதிகளில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் நடைமேடைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. எனவே, நகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொடைக்கானலில் மழை

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: போக்குவரத்து நெரிசல்

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு: போக்குவரத்து நெரிசல்

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




