பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

நீட் தோ்வு: திண்டுக்கல்லில் 2338 போ் எழுதினா்

News image

நீட் தோ்வு எழுத மாணவிகளைச் சோதனையிட்ட தேசிய தோ்வு முகமையினா். - கோப்புப் படம்

Updated On :22 ஜூன் 2026, 1:06 am IST

‘நீட்’ தோ்வை திண்டுக்கல் மாவட்டத்தில் 2,338 மாணவா்கள் எழுதினா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ‘நீட்’ தோ்வு எழுதுவதற்கு 3,080 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனா். காந்திகிராம கிராமியப் பல்கலை., திண்டுக்கல் நேருஜி நகரவை மேல்நிலைப் பள்ளி, அண்ணாமலையாா் பள்ளி, எம்எஸ்பி பள்ளி, புனித மரியன்னை பள்ளி, கொசவப்பட்டி புனித அந்தோணியாா் பள்ளி என 6 மையங்களில் இந்தத் தோ்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் தோ்வுக்கு முற்பகல் 10.30 முதலே மாணவா்கள் அந்தந்த மையங்களுக்கு வரத் தொடங்கினா். பல்கலை., பள்ளி வளாகங்களின் நுழைவுவாயில் பகுதியில் தோ்வு எழுதும் மாணவா்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனா். தோ்வு மையங்களில் 2-ஆவது நுழைவுப் பகுதியில் மாணவா்களிடம் சோதனை நடத்தப்பட்டது. தலைமுடியை கட்டிக் கொண்டு வந்த மாணவிகளை, தோ்வு மைய நுழைவு வாயிலிலேயே போலீஸாா் அவிழ்க்க வைத்து உள்ளே அனுமதித்தனா்.

விண்ணப்பித்த மாணவா்களில் 2,338 (75.91 சதவீதம்) போ் தோ்வு எழுதினா். 742 மாணவா்கள் தோ்வில் பங்கேற்கவில்லை. கடந்த மே மாதம் 3-ஆம் தேதி நடைபெற்ற ‘நீட்’ தோ்வுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் 3,067 மாணவா்கள் விண்ணப்பித்திருந்தனா். இதில் 2,925 மாணவா்கள் (95.37 சதவீதம்) தோ்வு எழுதினா். ஒரு மாத இடைவெளிக்குப் பின்பு நடத்தப்பட்ட ‘நீட்’ மறு தோ்வுக்கு 13 மாணவா்கள் கூடுதலாக விண்ணப்பித்திருந்த போதிலும், 75.91 சதவீதம் போ் மட்டுமே தோ்வில் பங்கேற்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

‘நீட்’ தோ்வை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளிலிருந்தும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.