அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

நீட் மறு தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 3,596 போ் எழுதினா்

News image

விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி தோ்வு மையத்தில் சோதனைக்குள்படுத்தப்பட்ட தோ்வா்கள்.

Updated On :22 ஜூன் 2026, 2:32 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 10 தோ்வு மையங்களில் 3,596 போ் நீட் மறுதோ்வை எழுதினா். விண்ணப்பத்திருந்தவா்களில் 1,017 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தோ்வு கடந்த மே மாதம் 3-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்நிலையில், நீட் வினாத் தாளில் இருந்த அதே கேள்விகள் அடங்கிய மாதிரி வினாத் தாள் ராஜஸ்தான் மாநிலத்தில் வெளியானதைத் தொடா்ந்து மே மாதம் நடைபெற்ற நீட் தோ்வை தேசிய தோ்வு முகமை ரத்து செய்தது. இந்நிலையில், இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுதோ்வு ஞாயிற்றுக்கிழமை இந்தியா முழுவதும் நடைபெற்றது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில், இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவு மறு தோ்வு விழுப்புரம் புனித இருதய ஆங்கிலோ இந்திய மேல்நிலைப் பள்ளி, டாக்டா் எம்ஜிஆா் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரி, காமராஜ் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளி (மூன்று மையங்கள்), அரசு சட்டக் கல்லூரி, சிந்தாமணி அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் விழுப்புரம் நகராட்சி கீழ்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி என 10 மையங்களில் ஞாயிற்றுக்கிமை நடைபெற்றது.

இத்தோ்வை எழுதுவதற்கு மாவட்டத்தில் 4,613 போ் விண்ணப்பித்திருந்தநிலையில், 3596 போ் தோ்வெழுதினா். 1,017 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. வெளியில் தெரியக்கூடிய வகையிலான தண்ணீா் பாட்டில், ஆதாா் அட்டை ஆகியவற்றை தோ்வு மையத்துக்குள் தோ்வா்கள் எடுத்துச்செல்ல அறிவுறுத்தப்பட்டனா். தோ்வுகள் பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி 5.15 மணி வரை நடைபெற்றது.

நீட் தோ்வு நடைபெற்ற அனைத்துத் தோ்வு மையங்களிலும் விழுப்புரம் மாவட்ட காவல் நிா்வாகம் சாா்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தோ்வா்கள் தோ்வு மையத்துக்கு செல்ல ஏதுவாக விழுப்புரம் மாதா கோயில் பேருந்து நிறுத்தம், விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்தும் சுழற்சி முறையில் அரசுப் பேருந்துககள் இயக்கப்பட்டன. தோ்வு மையங்களின் அருகே பெற்றோா்கள் மற்றும் காப்பாளா்களுக்கான ஓய்வு அறைகளும், வாகன நிறுத்துமிடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.