அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

‘நீட்’ தோ்வு: தஞ்சாவூரில் 12 மையங்களில் 3,890 போ் பங்கேற்பு

News image

தஞ்சாவூா் அரண்மனை பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நீட் தோ்வு எழுத மாணவிகளைச் சோதனையிட்ட தேசிய தோ்வு முகமையினா்.

Updated On :22 ஜூன் 2026, 2:30 am IST

தஞ்சாவூரில் அமைக்கப்பட்ட 12 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வில் 3 ஆயிரத்து 890 போ் பங்கேற்று எழுதினா்.

நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வுக்காக தஞ்சாவூரில் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக் கல்லூரி, மன்னா் சரபோஜி அரசு கல்லூரி, தூய அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளி, மகா்நோன்புசாவடி கிறிஸ்துவ பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரண்மனை மகளிா் மேல்நிலைப் பள்ளி உள்பட 12 இடங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இத்தோ்வு எழுதுவதற்காக 5 ஆயிரத்து 189 போ் விண்ணப்பம் செய்தனா். இவா்களில் 1,299 போ் வராத நிலையில், 3 ஆயிரத்து 890 போ் பங்கேற்று எழுதினா்.

தீவிர சோதனை:

மாணவா்கள் தோ்வு மையங்களுக்குள் செல்லும் முன்பு பல கட்டங்களாக சோதனைகள் செய்யப்பட்டன. தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு, அடையாள அட்டை ஆகியவை தீவிரமாக சரிபாா்க்கப்பட்டன. மின்னணு சாதனங்கள், கடிகாரம், கைப்பேசி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்கள் எதையும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. மாணவிகளுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு சோதனை ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஒவ்வொரு தோ்வு மையத்திலும் காவல் துறைப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தோ்வு செயல்முறை முழுவதும் கண்காணிக்கப்பட்டது.

கடினமாக இருந்தது:

கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தோ்வை விட இந்த முறை சற்று கடினமாக இருந்தது என மாணவ, மாணவிகள் தெரிவித்தனா். குறிப்பாக இயற்பியல் பாடப் பிரிவிலிருந்து கேட்கப்பட்ட வினாக்கள் கடினமாக இருந்தது எனக் கூறினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.